திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபகவான்' படத்தை அமீர் டைரக்ட் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஹீரோவாகவும், நீத்து சந்திரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன.
இப்போது படத்துக்கு சென்சாரில் ‘ஏ' சர்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
படத்தில் கவர்ச்சிப்புயல் நீதுசந்த்ரா இருந்தும் முகம் சுழிக்க வைக்கும் கவர்ச்சி சீன்கள் வைக்காமல் போனாலும், ஸ்டண்ட் சீன்கள் அதிக ரத்தமாக இருப்பதால் சென்சார் போர்டு இந்தப்படத்துக்கு ‘A’ சர்டிஃபிகேட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக விரைவில்... என்று தினமும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்த இந்தப்படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய படத்தை சேனல்களில் ஒளிப்பரப்ப தடை இருப்பதால் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சாட்டிலைட் ரைட்ஸை பிரபல சேனலான சன் டிவிக்கு விற்பனை செய்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் டைரக்டர் அமீர்.
இந்தப்படத்தை சென்ஸார் செய்வதற்கு முன்பு சன் டிவிக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்ய டைரக்டர் அமீரும், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகனும் பேரம் பேசு வந்தது குறிப்பிடத்தக்கது.




![தீயா வேலை செய்யனும் குமாரு இசை வெளியீடு part3 [video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.9451a5d5fc272af67b69a69e7fb8d7d8_Lnsp_259.jpg)
![தீயா வேலை செய்யனும் குமாரு இசை வெளியீடு part2 [video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.ac550b751c05d513d859ea611f80b816_Lnsp_259.jpg)
![தீயா வேலை செய்யனும் குமாரு இசை வெளியீடு part1 [video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.ab1e1d0cb6ebf397dbaa2f79b89aa17c_Lnsp_259.jpg)
![எதிர் நீச்சல்: சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா, அனிருத், துரை செந்தில்குமார் இன்டர்வியூ[video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.6e612d843510ceea710c72ff7eb3ad8d_Lnsp_259.jpg)
![தங்க மீன்கள் இசை வெளியீடு [video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.00b0509e404d3662ded8b61760745963_Lnsp_259.jpg)


![என் முன்னாடியே என் மகனை பாய்ஞ்சு கட்டிப்புடிச்ச நமீதா: பாக்யராஜின் கலகலப்பான பேட்டி[video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.5dfd7c770d8ffc7dbd51a07aae4c17a6_Lnsp_259.jpg)
![நடிகை நமீதா 'குகன்' ஆடியோ விழாவில்[video]](http://www.soundcameraaction.com/modules/mod_news_pro_gk4/cache/k2.items.cache.019bc5d33dccc9531c78434d586e08fe_Lnsp_259.jpg)